புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண தொகை.! கலெக்டர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரண தொகையாக தலா ரூ.1,000 பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


தற்போது வேறு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அடையாள அட்டையை காண்பித்து நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று மேற்குறிப்பிட்டுள்ள இதர ஆவணங்கள் சூழ்நிலையின் காரணமாக முகவரி மாற்றம் செய்யப்படாமல் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் முகவரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ளலாம், என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments