ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூன்றாம் நாள் நிகழ்வாக, கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் மனித உரிமை மற்றும் மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றன.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் து.சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, விழிப்புணர்வு வகுப்பைத் தொடங்கி வைத்தார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
மனித உரிமைகள் & மகளிர் பாதுகாப்பு
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அறந்தாங்கி வழக்கறிஞர் பி.எஸ்.புகழேந்தி, மாணவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, மகளிர் பாதுகாப்பு குறித்து ஆவுடையார்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் எம்.பத்மா, மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் எஸ்.நாகலெட்சுமி, எஸ்.வளர்மதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் மாணவிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், அவசர உதவி எண்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்தனர்.
அரசு நலத்திட்டங்கள் விளக்கம்
தொடர்ந்து, அறந்தாங்கி அரசினர் மகளிர் விடுதி காப்பாளினி கே.சந்தானலட்சுமி அரசு மகளிர் விடுதி வசதிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். கல்லூரியின் தமிழ்ப்புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.செந்தில்குமார், அரசின் கல்வி உதவித்தொகைகள், 'புதுமைப்பெண் திட்டம்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன் திட்டம்' ஆகியவற்றின் நோக்கம், மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார். நூலகர் மா.பொற்கொடி கல்லூரி நூலகத்தின் அமைப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்துப் பேசினார்.
ஊக்கவுரையும் பங்கேற்பும்
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து வணிக நிருவாகவியல் துறை விரிவுரையாளர் கோ.இரத்தினசிவ குமார், வணிகவியல் துறை விரிவுரையாளர்கள் முனைவர் செ.கார்த்திக், முனைவர் மா.பாலமுருகன், கோ.கோபாலகிருஷ்ணன், கு.செல்வராஜ், ந.நாகராஜன் ஆகியோர் ஊக்கவுரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கா.காளிதாஸ், விரிவுரையாளர்கள் முனைவர் ப.மலர்விழி, இரா.ராஜலட்சுமி, ப.ஜெயந்தி, மு.கோவிந்தன், பொ.கார்த்திகேயன், இரா.சூர்யா, வி.அங்கயற்கன்னி, செல்வி புவனேஸ்வரி உட்பட பேராசிரியர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை தொகுத்து வழங்கினார். நிறைவாக, நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன் நன்றி கூறினார்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.