ராசநாயக்கன்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து.!ராசநாயக்கன்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி அருகே எம். எம்.எஸ் என்ற நான்கு சக்கர உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராசநாயக்கன்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி அருகே ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. நேற்று தொழிற்சாலையில் உள்ள எண்ணெய் தொட்டியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அதிகாரிகள் மற்றும் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 


இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ மற்ற பகுதிக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments