ஆவுடையார்கோவில் பகுதிகளில் கனமழை; வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...ஆவுடையார்கோவில் அருகே பூங்குடி கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை காற்றுடன் பெய்த கனமழையால் வீடு இடிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.


புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் அருகே பூங்குடி கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டில், கருப்பூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர், தனது மனைவி சக்தி, மகன்கள் ராஜேஸ்வரன்(வயது 10), தர்ஷன்(7) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் நேற்று வீட்டில் ஒரு அறையில் படுத்து தூங்கினர்.

நேற்று அதிகாலை அப்பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென வீட்டின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டம் ஆனது. இதில் கட்டில், டி.வி., மிக்சி உள்பட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாரிமுத்து குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த அறை இடியவில்லை. தினமும் வீட்டிற்குள் படுத்து தூங்கும் அவர்கள், நேற்று முன்தினம் வேறொரு அறையில் படுத்ததால், அவர்கள் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments