கீரமங்கலத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு மரக்கன்று கொடுத்து வளர்க்கச் சொல்லி நூதன தண்டனை கொடுத்த போலீசார்!



சாத்தன்குளம் சம்பவத்தால் மக்களுக்கு போலீசார் மீது இருந்த மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், முகக் கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய இளைஞர்களைப் பிடித்து அவர்களுக்கு முகக் கவசம் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி வீட்டில் வளர்க்க வேண்டும் என்று நூதன் தண்டனை கொடுக்கும் போலீசாரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் முழு ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய இளைஞர்களைப் பிடித்த ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா மற்றும் கீரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதர்சன் மற்றும் போலீசார் அவர்களுக்கு முகக் கவசம் வழங்கியதுடன் அவர்கள் கையில் ஒரு மரக்கன்றையும் கொடுத்து முகக் கவசம் அணியாமல் வந்ததற்குத் தண்டனை இந்த மரக்கன்றை நல்ல முறையி்ல் வளர்ப்பது தான். 

இந்த மரக்கன்றைப் பார்க்கும் போதெல்லாம் தலைக்கவசம், முகக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்ல வேண்டும் என்பது நினைவுக்கு வர வேண்டும்.

அதனால் தினமும் உங்கள் பார்வை படும் இடத்தில் இந்தக் கன்றை நட்டு நல்ல முறையில் வளர்க்க வேண்டும். இந்த மரக்கன்று 5 ஆண்டுகளில் வளா்ந்து நல்ல பலனை உங்களுக்குக் கொடுக்கும் என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர். மேலும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அவர்களின் முகவரியும் வாங்கிக் கொண்டனர். 

அடித்து உதைத்து அபராதம் விதித்தால் மக்கள் போலீசார் மீதான நட்பும், நம்பிக்கையும் காணாமல் போய்விடும். ஆனால் இப்படி அன்பாகச் சொன்னால் நிச்சயம் மக்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments