புதுக்கோட்டையில் அதிக மின்கட்டண வசூலை கண்டித்து நூதனப் போராட்டம்.!ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அளவுக்கு அதிகமாக மின் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் குழந்தைகளை கொண்டு வாய்ப்பாடு மூலம் மின்சார ஊழியர்களுக்கு கணக்கு சொல்லி கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஷ் தலைமை தாங்கினார். ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்மொழி முன்னிலை வகித்தார்.

ஊரடங்கு காலத்தில் உரிய நேரத்தில் கணக்கெடுப்பு செய்யாதது மின்சார வாரியத்தின் தவறே. தற்போதைய ஊரடங்கு காலத்தினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் மின்சார இணைப்பை துண்டித்து, அபராதமும் கேட்டு வருவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments