போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார், போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புதிய பஸ் நிலையத்தில் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. போலீசார் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் பணியாற்ற வேண்டும்.
பொதுமக்கள், வணிகர்களுடன் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அரசு அறிவித்த நேரத்திற்கு பிறகு வணிகர்கள் கடையை திறந்திருந்தால் அவர்களை துன்புறுத்தக்கூடாது. ஒருமுறைக்கு இருமுறை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். தொடர்ந்து அதே தவறை அவர்கள் செய்தால், அதை அப்படியே வீடியோ பதிவு செய்து சட்டரீதியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமே தவிர, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து துன்புறுத்த கூடாது, என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக காப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை இனி நடக்காமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் உறுதியாக பாயும், என்று கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments