மீமிசலில் நாளை 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முழு கடையடைப்பு நடைபெற உள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
மீமிசலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து அனைத்து தரப்பினருடன், வர்த்தக சங்கத்தினர் கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக சங்கிலி தொடராக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாளை 16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை மீமிசலில் உள்ள மளிகை, காய்கறி, பழக்கடை, டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு, சுய ஊரடங்கு கடைப்பிடிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments