ஆதிப்பட்டிணத்தில் தமுமுக - மமக புதிய கிளை தொடக்கம்.!புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள ஆதிப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை தொடக்கம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் ஆதிப்பட்டிணத்தில் தமுமுக, மமக சார்பில் புதிய கிளை 13.07.2020 அன்று துவங்கபட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு தலைமை மாவட்ட தலைவர் A.அபுசாலிகு தலைமை தாங்கினார்.மமக மாவட்ட செயலாளர் A.கிரீன் முகமது, மாவட்ட பொருளாளர்  அஜ்மல்கான், தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் A.J.அப்பாஸ், ஒன்றிய செயலாளர் கலந்தர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது அவர்கள் கழக கொடியேற்றி இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சி இறுதியில் கிளைத்தலைவர் A அசாருதீன் நன்றி கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments