அரசு நிர்ணயித்த மின்கட்டணத்தையே செலுத்த வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!தமிழகத்தில் ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மாத மின் கட்டண தொகை அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மின் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உரிய வருமானம் இன்று மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின் கட்டண கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல வீடுகளுக்கு எதிர்பார்க்காத அளவு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


TNEB

இந்நிலையில் முந்தைய மின் கட்டணங்கள் அடிப்படையில் ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இன்று விசாரணைக்கு வந்த பொழுது, மின் கணக்கீடு முறையாக தான் செய்யப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசு நிர்ணயித்த மின்கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments