நேபாளிக்கு ஹிந்துத்வ அமைப்பால் இழைக்கப்பட்ட கொடுமை.!நேபாளத்தை சார்ந்த ஒருவருக்கு மொட்டையடித்து , ஜெய் ஶ்ரீராம் கோஷம் போடச் சொன்ன இந்துத்வ அமைப்பினரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அண்மையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி , ராமர் நேபாள நாட்டினைச் சார்ந்தவர் என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில், விஷ்வ ஹிந்து சேனா என்ற இந்துத்வ அமைப்பினைச் சார்ந்த அருண் பதக் என்பவர் பேஸ்புக்கில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். அதில் அந்த அமைப்பினை சார்ந்தவர்கள் நேபாளத்தை சார்ந்த ஒரு மனிதரை அரை நிர்வாணமாக்கி, மிரட்டி ஜெய் ஶ்ரீராம் என கோஷமிடச் சொல்கின்றனர். அவருடைய தலையையும் மொட்டையடித்து ஜெய் ஶ்ரீராம் என எழுதி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மற்றும் நேபாளத்திற்கு எதிராகவும் கோஷமிடச் சொல்ல, நேபாளியும் பயத்தில் அதனை சொல்கிறார். இதனை பதிவிட்டுள்ள அருண் பதக், தன்னை பின்பற்றுபவர்களையும் நேபாளிகளிக்கு மொட்டை அடித்து தலையில் ஜெய் ஶ்ரீராம் என எழுதுமாறு தூண்டுகிறார். இவ்வாறு நேபாளிகளை துன்புறுத்துவதன் மூலம் நேபாள பிரதமர் ராமரை பற்றி பேச பயப்படுவார் என அவர் அந்த காணொளில் குறிப்பிடுகிறார்.

இந்த சம்பவத்திற்காக பேலுபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக வாரணாசி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிகழ்வுகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள இரு நாட்டு உறவுகளை மேலும் மோசமடைய வைக்க கூடும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments