அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்.!அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைப்பது குறித்து நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர் மலர்விழி, அறந்தாங்கி வர்த்தக சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பகுதியான மருத்துவமனையின் வடக்கு பகுதியில் தடுப்புகள் அமைத்து, கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை மட்டும் இருக்க வைப்பது என்றும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை புதுக்கோட்டை அனுப்பி வைப்பது, என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments