புதுக்கோட்டை மாவட்டத்தில் புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழிற்கடன் பெற விண்ணப்பிக் அழைப்பு.!ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டம் திருவரங்குளம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மற்றும் விராலிமலை வட்டாரங்களை சேர்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்டகால கடனாக வழங்கப்படும்.

இந்நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களும், பெண்கள் என்றால் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த நிதி உதவியை பெற புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் தஞ்சாவூர் மெயின் ரோடு, ராமச்சந்திராபுரம் அக்ரஹாரம், புதுக்கோட்டை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரிலும், 04322 -290732 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments