மணமேல்குடி வட்டாரத்தில் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு.!தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி இயக்கத்தின் மூலம் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மணமேல்குடி வட்டாரங்களில் கார்கமலம், கோ.பழங்குளம், சிறுவரை, பெருமருதூர், கரகத்திகோட்டை, கொடிக்குளம், விச்சூர், நெல்வேலி,


மஞ்சக்குடி, சாத்தியடி, செய்யானம், வெட்டிவயல், மணமேல்குடி, தண்டலை, பானாவயல், காரக்கோட்டை, கம்பர்கோவில், கோபாலபுரம், பிராமணவயல் ஆகிய கிராமங்களில் தலா 100 எக்டேர் மானாவாரி தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அவ்வாறு மானாவாரி நிலங்களில் உழவு பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.1,250 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் மானாவாரி தொகுப்பில் விதைப்பு செய்வதற்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதை வழங்கப்படுகிறது. விதைகள், விதை நேர்த்தி மருந்துகள் மற்றும் உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானியத்தில் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மானாவாரி விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகலுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது மணமேல்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனியய்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments