கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் அவுலியா நகர்.! நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்.?



கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக தெருவிளக்கு எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவுலியா நகர் பகுதி முழுவதும் கடந்த ஆறு நாட்களாக அங்குள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை என கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் வருவதற்கு கூட அச்சமடைந்துள்ளனர். 

தற்போது உள்ள சூழலில் ஆங்காங்கு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்ற காலகட்டத்தில் இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவுலியா நகரில் ஒரு பகுதி....


இதுகுறித்து வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எரியாத மின் விளக்குகளை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக அவுலியா நகர் பகுதியில் எரியாத மின் விளக்குகள் சரி செய்து கொடுத்து கிராம மக்களின் நலனை காக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments