பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபட்டினத்தில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்..!புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அம்மாபட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு, முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெறு, பொருளாதார பேரழிவை கொரானாவால் மறைக்காத உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் SAM.அரபாத் அவர்கள்  தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் S.செய்யது இப்ராஹிம் அவர்கள் மற்றும் மாவட்ட பொது செயலாளர் U.செய்யது அகமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார், மாவட்ட பொருளாளர் JME. நசுருதின் கண்டன  கோஷங்கள் எழுப்பினார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நகர மற்றும் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் SDPI கட்சியின் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். நான்கு அம்சக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் எழுச்சிமிகு கண்டன கோஷங்கள் உடன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்துக்கொண்டனர்.

தகவல்:
சமூக ஊடகபிரிவு
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments