அறந்தாங்கி அருகே வெவ்வேறு சம்பவத்தில் கோழிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை.!வெவ்வேறு சம்பவங்களில் கோழிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அறந்தாங்கியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது-42). இவர், அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மணிகண்டன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதேபோல, அறந்தாங்கியை அடுத்த மறமடக்கியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி(60) என்பவர் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அறந்தாங்கி அருகே உள்ள செங்கமாரியை சேர்ந்தவர் ரமேஷ் (32). சொந்தமாக கோழிக்கடை வைத்துள்ள இவர் நேற்று நற்பவளகுடி பாலம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments