மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா? மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..!இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் காவல் நிலைய லாக்-அப் மரணங்கள் தொடர்பாக உடனே பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இந்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள உச்ச நீதிமன்றம் இந்திய மாநிலங்களில் அந்தந்த மாநில மனித உரிமை ஆணையங்கள் உண்மையிலேயே செயல்படுகின்றனவா உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம், இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கைகளை சுட்டிக்காட்டி, திலீப்.கே. பாசு என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2017-18 ஆண்டில் மட்டும் 148 லாக்-அப்,காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தரப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இரண்டே இரண்டு வழக்குகளில் மட்டுமே காவல் அதிகாரிகளுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யவும், 38 வழக்குகள் தொடர்பாக துறைசார் விசாரணைக்கும் பரிந்துரைந்துள்ளது. அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், 2.2 சதவீத காவல் நிலைய மரணங்கள் மட்டுமே தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018-ஆம் ஆண்டு அறிக்கையின்படி 70 காவல் மரணங்கள் வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனுவின் அடிப்படையில் விசாரித்த உச்சசநீதிமன்ற நீதியரசர்கள், இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் காவல் நிலைய லாக்-அப் மரணங்கள் தொடர்பாக உடனே பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இந்திய அரசுக்கும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments