மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 ரத்து செய்யக் கோரி ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்.!



மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 ரத்து செய்யக் கோரி ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஏ.ஐ.டி.யு.சி மீனவ சங்கம் சார்பில் மீனவர்களை பாதிக்கும் வகையில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மீனவர் கொள்கை 2020 யை ரத்து செய்ய கோரியும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல்  அளவை உயர்த்தி வழங்கிட வேண்டும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் மீன்பிடி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. 

இந்த சி.பி.ஐ தாலுகா செயலாளர் முருகானந்தம்,நிர்வாகிகள் மோகன்தாஸ்,ஜோதிபாசு,சினிஜகுபர்,திருவாசகம்,பிச்சை,நாகராஜன்,கன்னியம்மாள்,மாடசாமி அன்சரி,தர்மா  உள்ளிட்ட மீனவ சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments