ஜெகதாப்பட்டினத்தில் சுய ஊரடங்கு முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.!புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஜெகதாப்பட்டினம் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீனவர்கள் சுய ஊரடங்கை கடந்த ஒரு வாரம் கடைப்பிடித்தனர். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த ஊரடங்கு முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும் வழக்கம்போல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இந்த சுயஊரடங்கால் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments