கந்தர்வகோட்டையில் அரசு பள்ளியில் மகனை சேர்த்த பட்டதாரி ஆசிரியர்.!கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாற்றுத்திறன் ஆசிரியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான கருப்பையா தனது மூத்த மகன் சந்தோஷ் குமாரை கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்துள்ளார்.


தற்போது, பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வரும் இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்தது, பிறபெற்றோரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


Post a Comment

0 Comments