வாணியம்பாடியில் வாட்டர் ஹீட்டரில் கைவைத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு என்னுமிடத்தில் புருஷோத்தமன் பவித்ரா என்பவர்களின் ஒன்றரை வயது குழந்தை அனன்யா. தாய் பவித்ரா சமையலறையில் எவர்சில்வர் பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடு செய்துள்ளார்.
அப்போது வாட்டர் ஹீட்டரிலிருந்து எவர்சில்வர் குடத்தில் மின்சாரம் பாய்வதை அவர் அறிந்திருக்கவில்லை. அவர் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அனன்யா எவர்சில்வர் குடத்தை தொட்டுள்ளார்.
அப்பொழுது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒன்றரை வயது குழந்தையான, அனன்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் சாதனங்களை முறையாக பயன்படுத்தாததால் ஏற்படும் விபத்துகள் தொடர்கதையாகிவிட்டது.
அண்மையில் சென்னையில் அலமாரியில் சார்ஜ் போடப்பட்டிருந்த மொபைலை எடுக்கச் சென்ற மூன்று வயது குழந்தை மேல் டிவி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படி ஒரு விபத்து சம்பவம் வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.