மீமிசலில் பரவலாக மழை.!தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீமிசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கோபாலப்பட்டிணம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், தண்டலை, அம்மாபட்டினம், மணலூர், மும்பாலை மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. அதிகாலை நேரத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் காலதாமதமாக சென்றனர். மேலும், காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.


Post a Comment

0 Comments