புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...



கொரோனா வைரஸ் அனைவரது வாழ்க்கையையும் புரட்டிபோட்டு விட்டது என்றே சொல்லலாம். கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டையில் புதிய முயற்சியாக காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 28-ந் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை கலெக்டர் அலுவலகத்தில் நேரிடையாக நடந்து வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதன் முறையாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக செயலி மூலம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments