கோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!கோட்டைப்பட்டினம் பகுதியில் ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது. இந்த தர்காவில் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது ரத ஊர்வலம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனோ பரவலை தடுக்கும்பொருட்டு தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவு கூட அனுமதிக்கப்படுவதில்லை. 

ஆனால், ரத ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதால் ஊரடங்கை மீறியதாக ஜமாத் நிர்வாகிகள் ஹோஜா பகுருதீன், சரிப் அப்துல்லா உள்பட 20 பேர் மீது கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments