ஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.! வட்டாட்சியர் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கீழ்காணும் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு அக்கிராமத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ளவாறு நேர்காணல் தேர்வு எதிர்வரும் 01.10.2020 அன்று காலை மணியளவில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. (ந.க.2787/2020/13)

வ.எண்

வருவாய் கிராமத்தின் பெயர்

ஒதுக்கீடு செய்யப்படும் இனச்சுழற்சி முறை

பாலினம்

1.

நரியனேந்தல்

எண்.77/MBC/DNC-(P) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், முன்னுரிமை பெற்றவர்

பொது

2.

குமுளூர்

எண்-78,BC(M)-NP பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்) முன்னுரிமையற்றவர்

பொது

3.

செங்கானம்

எண்-79,G.T-(NP) பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர்

பொது

4.

கடவாக்கோட்டை

எண்-80,BC(OTM)-P பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர்

பொது

5.

எழுநூற்றிமங்கலம்

எண்-81, G.T-NP(W) பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர்

பொது

6.

கரூர்

எண்-82,SC-(NP)ஆதிதிராவிடர் முன்னுரிமையற்றவர்

பொது

7.

பூவளூர் உட்கடை வடவயல்

எண்-83,MBC/DNC-(NP) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்

பொது


தகுதிகள்:
  1. 5-ம் வகுப்பு தேர்ச்சி.
  2. 01.07.2020 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதிற்குட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  3. மிதிவண்டி ஓட்ட தெரிய வேண்டும்.
  4. தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  5. மேற்காணும் வருவாய் கிராமத்தையோ அல்லது அதனை சுற்றியுள்ள குக்கிராமத்தையோ சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  6. நன்னடத்தை சான்று மற்றும் உடல் தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
  7. தகுதியுடைய நபர் திருமணமானவராக இருப்பின் ஒரு திருமணத்திற்கு மேல் செய்தவராக இருத்தல் கூடாது.
  8. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1.கல்வி மாற்றுச் சான்றிதழ், 
2.மதிப்பெண் பட்டியல், 
3.இருப்பிடச்சான்று, 
4.சாதிச்சான்று, 
5.வருமானச்சான்று
6.குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), 
7.ஆதார் அட்டை

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களது அசல் சான்று ஆவணங்கள் மற்றும் இரண்டு சான்றொப்பம் இடப்பட்ட ஆவண நகல்கள் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments