இந்தோனேசியாவை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் மீதான விசாரணையை ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்.. கீழ்கோர்ட்டுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.!இந்தோனேசியாவை சேர்ந்த ஜெய்லானி, ஷிதி, ரொகானா உள்பட 10 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிவாசலில் தங்கி இருந்ததாக எங்கள் மீது ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். எங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். விசாரணையில் நாங்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், “மனுதாரர்கள் இந்தோனேசியாவில் இருந்து இங்கு வந்துள்ளனர். இங்கு மத ரீதியிலான கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அவர்களே ஒத்துக்கொள்கின்றனர். எனவே அவர்கள் மீதான வழக்கு விசாரணையை மாவட்ட கோர்ட்டு விரைவாக விசாரித்து, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments