அக்டோபர்-2 நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா.!



கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா (கிராமசபை கூட்டத்திற்கான விவாத பொருள்கள்) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா (கிராமசபை கூட்டத்திற்கான விவாத பொருள்கள்) என்பது மிக முக்கியமான ஒன்று.

வருகிற (அக்டோபர்-2) நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல்,மழைநீர் சேகரிப்பு அமைப்பது, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's plan Campaign), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் உட்பட விவாதிக்க வேண்டிய தீர்மானங்களை தற்போது தமிழக அரசே அளித்துள்ளது.

மாநில அரசு அளித்துள்ள தீர்மானங்களுடன் அந்தந்த கிராமங்களுக்கு தேவையான தீர்மானங்களையும் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றுவது அவசியம்.

கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அஜெண்டாவை (கிராமசபை கூட்டத்திற்கான விவாத பொருள்கள்) படித்து விட்டு அதன் நகலையும் எடுத்துக்கொண்டு கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். தீர்மான அம்சங்கள் குறித்து விவாதித்து, திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments