புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி 9 ஆயிரத்து 80 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 92 பேர் பூரண குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில், இதுவரை 8 ஆயிரத்து 222 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 719 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தோர் எண்ணிக்கை 139 ஆக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments