மீமிசலில் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.!மீமிசலில் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட கோரியும், முதல் மந்திரி யோகி ஆதித்யனாத் பதவி விலக கோரியும் நேற்று 10.10.2020 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட கோரியும், முதல் மந்திரி யோகி ஆதித்யனாத் பதவி விலக கோரியும் மீமிசலில் கடைவீதியில் புதுகை கிழக்கு மாவட்டம் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட செயலாளா் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்சா தலைமை தாங்கினார். இதில் SMI மாநில செயலாளா் வழக்கறிஞா் நூா்தீன் கண்டன உரை ஆற்றினார். இதில் த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments