இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவராக கே.‌நவாஸ்கனி M.P தேர்வு
மாநிலத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டது  குறித்து கே.‌நவாஸ்கனி  M.P  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் தாய்ச்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று திருச்சியில் தேசிய தலைவர் முனீருள் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் கே ஏ எம் முஹம்மது அபுபக்கர் எம்எல்ஏ, மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜஹான் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிர்வாகக் குழுவில் என்னைஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்த தலைவர் பேராசிரியர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அமானிதமான இப்பொறுப்பை சிறந்த முறையில் கையாண்டு, செயல்பட அனைத்து சகோதரர்களும் பிரார்த்திக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த தலைமை நிர்வாகக் குழுவிற்க்கும், நேரிலும், அலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

இன்னும் மென்மேலும் சமூக, சமுதாய பணியாற்றிட, அனைத்து மக்களுக்குமான நல்லிணக்கமிகு மக்கள் பணியாற்றிட அன்பு சொந்தங்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
--
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments