மக்காவின் பெரிய மசூதியில் தினசரி தொழுகை நடத்த அனுமதி




குடிமக்களும் குடியிருப்பாளர்களும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மக்காவில் உள்ள பெரிய மசூதியில் தினசரி தொழுகை நடத்த நேற்று அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்லாத்தின் புனித இடமான மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் ஏழு மாதங்கலுக்கு பிறகு முதல் முறையாக சவுதி அரேபியா தனது குடிமக்களையும், நாட்டிற்குள் வசிப்பவர்களையும் தினசரி தொழுகை நடத்த நேற்று அனுமதி அளித்து உள்ளது.

நவம்பர் 1 முதல், உம்ரா செய்ய பாதுகாப்பானதாகக் கருதப்படும் குறிப்பிட்ட நாடுகளின் பயணிகளை மட்டும் சவுதி அரேபியா அனுமதிக்கும், இது கொரோனா வைரஸால் ஏற்படும் ஆபத்து நீங்கும் வரை இருக்கும் என  சவூதி செய்தி நிறுவனமான எஸ்பிஏ கடந்த மாதம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments