வெளிநாடுகளுக்கு செல்லும் யாத்ரீகர்கள் வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யவேண்டும் என்பது அநியாயம்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்




வெளிநாடுகளுக்கு செல்லும்  யாத்ரீகர்கள்  வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யவேண்டும் என்பது அநியாயம்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய வருமானவரி சட்டங்களின்படி, வெளிநாடுகளுக்குச் செல்வோர் 2 இலட்சம் ரூபாய்களுக்கு அதிகமாக செலவு செய்தால் வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யவேண்டும் என்ற கட்டாய நடைமுறை, புனித ஹஜ்ஜுக் கடமை நிறைவேற்றச் செல்லும் லட்சக்கணக்கான ஏழை யாத்ரீகர்களை கடுமையாகப் பாதிக்கும்.

புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வெளிநாடுகளுக்குச் செல்லும் யாத்ரீகர்கள், இஸ்லாத்தின் கடமையை நிறைவேற்றவே செல்கின்றனர்.  ஏராளமான ஏழை முஸ்லிம்கள் தாம் காலமெல்லாம் பாடுபட்டு உழைத்து ஈட்டிய சிறிய வருமானத்திலிருந்து, ஆண்டுக்கணக்காக சிறுகச்சிறுக சேமித்து தம் வாழ்நாள் கனவான ஹஜ்ஜை நிறைவேற்ற நாடுகின்றனர்.  பொருளாதார ரீதியாக ஏழ்மையில் வாடும் அவர்களிடம் வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அவர்களின் வாழ்நாள் ஆசையை அழிப்பதாக அமையும்.  

எனவே, ஹஜ்ஜை நிறைவேற்ற வெளிநாடு செல்வோருக்கு வருமானவரிப் படிவம் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று மத்திய அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments