புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நேற்று தொடங்கியது. டீன் பூவதி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பெண்களுக்கு மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து நகர்ப்புறங்களில் விழிப்புணர்வு இருந்தாலும், கிராமப்புறங்களில் இந்நோய் குறித்து பெண்களிடம் அதிகம் விழிப்புணர்வு இல்லை எனவும், இந்த முகாமில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த பரிசோதனை முகாம் வருகிற 29-ந் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முகாம் நடைபெறும். முகாமில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதனை வராமல் தடுப்பது குறித்து, வந்த பின் உரிய சிகிச்சை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கமும் அளிக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments