அறந்தாங்கி மளிகைக்கடையில் ரேஷன் மண்எண்ணெய், கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து விற்பனை.! பறிமுதல் செய்த தாசில்தார்.!!



அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு மளிகை கடையில் ரேஷன் மண்எண்ணெய் மற்றும் மானிய விலை கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக அரசு குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜெயசித்திரகலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், நேற்று அந்த மளிகை கடையில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் 35 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய், 2 மானிய விலை கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

அதனை தாசில்தார் பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக அந்த மளிகை கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments