செய்யானம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்த ஒன்றியக்குழு தலைவர்...மீமிசலை அடுத்த செய்யானம் ஊராட்சியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் செய்யானம் கிராமத்தில் ரூ.23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதனை தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவருமான பரணி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 

அப்போது ஊராட்சி மன்றத்தலைவர் ஐஸ்வர்யா மலையரசன், துணைத் தலைவர் மீனாம்பாள் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments