தேனியில் நடைபெற்ற SDPI கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாம்

         தேனியில் SDPI கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாம் 31-10-2020 மற்றும் 01-11-2020 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 
இந்த பயிற்சி முகாமில்  SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  மாநில பொது செயலாளர் அ.சா.உமர் பாருக் அவர்கள் மற்றுமொரு மாநில பொது செயலாளர்  அப்துல் ஹமீத், நெல்லை மாவட்ட தலைவர் கனீ, மாநில செயற்குழு உறுப்பினர் AK கரீம், மதுரை மாவட்ட பொறுப்பாளரும் இத்துறையின் Coordinator - மாகிய ஜியாவுதீன் ஆகிய உயர் மட்ட நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர். இதில் SDPI கட்சியின் மாநில , மாவட்ட,  நி்ா்வாகிகள் பங்கேற்றனா்.

        இந்த SDPI கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாமில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர்கள் SDPI கட்சியின் அறந்தாங்கி தொகுதி தலைவர் டாக்டர் ஹனிபா மற்றும் அறந்தாங்கி தொகுதி இணை செயலாளர்
சாகுல் ஹமீது பங்கேற்றார்கள்...

மேலும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக மூன்று நபர்கள் கலந்து கொண்டனர்

 இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் ஒருவரை எப்படி பேச்சாளராக உருவாக்க வேண்டும், பேச்சாளருக்கான தகுதிகள் என்ன, விதவிதமான சபைகளில் மேடைகளில் போராட்டக் களங்களில் எவ்வாறு பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற வகுப்புகளும், பயிற்சி (Practical) வகுப்புகளும் நடைபெற்றன.

புகைப்படங்கள்தகவல்:
SDPI கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments