கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை   

புதுக்கோட்டை மாவட்த்தில்  கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை    தீபாவளி பண்டிகை விழா காலம் தொடங்குவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட பொதுமக்கள் முககவசம் அணியவும், அதிகமாக மக்கள் கூடுமிடங்களில் சமூக இடைவெளியினை முறையாகக் கடைபிடிக்கவும், கைகளை அடிக்கடி கழுவிடவும் அறிவுறுத்தப்படுகிறது. 

அனைத்து கடைகளிலும், கடை உரிமையாளர்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடனும், சமூக இடைவெளிக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிப்பதுடன், வளாகத்தில் கிருமி நாசினி தெளித்தும், வருகை தரும் பொதுமக்களை முககவசம் அணிந்துகொண்டு வரவும் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


 
மேலும், இதனை கடைப்பிடிக்காத மற்றும் மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், தொற்று நோய்கள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments