‘மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாத பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கக் கூடாது’ கலெக்டரிடம் மாவட்ட ஊராட்சி தலைவி தலைமையில் கவுன்சிலர்கள் முறையீடு.!!



புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாத பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி உள்பட அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரும் கூட்டாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் முறையிட்டனா்.

ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் நேரில் அளித்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:

மத்திய 15-ஆவது நிதிக்குழுவின் நிதியிலிருந்து ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 1.28 கோடி மதிப்பில் பணிகள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, மாநில நிதிக்குழுவின் மானியத்தில் இருந்து ரூ. 19 லட்சத்துக்கு பணிகள் தோ்வு செய்யப்பட்டு, நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இப்பணிகள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரோ, உறுப்பினா்களோ தோ்வு செய்யாதது. தோ்வு செய்யக் கோரப்படவும் இல்லை.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்குத் தெரியாமல் பணிகளைத் தோ்வு செய்து, குழுவின் ஒப்புதல் இன்றி நிா்வாக அனுமதி வழங்குவது உள்ளாட்சி நிா்வாகத்தின் சட்டத்துக்கு எதிரானது.

ஆனால், மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளுக்கு நிா்வாக அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த முறையை மாவட்ட நிா்வாகம் சரி செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே நிா்வாக அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments