ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழு கூட்டம்.!ஆவுடையார் கோவிலில் ஊராட்சிஒன்றியக் குழுவின் சிறப்பு கூட்டம் அதன் தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது.

ஆணையாளர் குமரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர் செந்தில் குமரன் பேசும்போது, ஆவுடையார்கோவில் கடைவீதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் மனிதகழிவுகள் வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வடிகால் வாய்க்காலில் கழிவுகளை கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் தனிநபர்கள் சாக்கடை நீர் வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றார். 

கவுன்சிலர் உதயகுமார் பேசும்போது, எனது வார்டுக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments