அறந்தாங்கி அருகே அரசு பள்ளி ஆய்வகத்துக்கு ரோபோ.!அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கல்வி சார்ந்து உரையாடும் ரோபோ பள்ளியின் ஆய்வகத்திற்க்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆய்வகத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். மத்திய அரசின் நிதியோக் திட்டத்தின் கீழ் ரோபோ இப்பள்ளிக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்த ரோபோவில் மாணவர்களுடைய கல்வி சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனால் மாணவர்கள் தங்களது கல்வி சார்ந்த சந்தேகங்களை ரோபோவிடம் கேட்டால் சரியான பதில் தெரிவிக்கும். 

நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பள்ளித்தலைமையாசிரியர் அய்யாக்கண்ணு மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments