குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பிரத்யேக காவல் நிலையம்... திருச்சியில் திறப்பு...!




குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பிரத்யேக காவல் நிலையம்... திருச்சியில் திறப்பு...!
குழந்தைகளுக்கான நாட்டின் முதல் பிரத்யேக காவல் நிலையம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் கூடுமானவரை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் முதல் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரஜ டி.ஐ.ஜி.ஆனி விஜயா தலைமையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் இந்த காவல் நிலையத்தை திறந்து வைத்தார். திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு பிரத்யேக காவல் நிலையம் திருச்சியில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் தமிழகம் 7-வது இடத்தில் இருப்பதாகவும், நாடு முழுவதும் 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கான காவல் நிலையங்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுக்கப்படுவதுடன் விரைந்து விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான காவல் நிலையங்களில் பெண் போலீஸார் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments