விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 5 கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்..!




மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக்கோரி கடந்த 26 தினங்களாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 புதிய வேளாண் சட்டங்களையும், மத்திய அரசை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாய அமைப்புகள் சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமமக்கள் தடுத்து நிறுத்தம்

அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அண்ணாபண்ணை அகரப்பட்டி, நிலையபட்டி, முதலிப்பட்டி, வேளாம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர்களோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றவர்களை அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து அண்ணா பண்ணையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments