மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாங்க புகார் அளிக்கலாம்..!
மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம்கேட்டால், அது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கான முகவரியை மின்வாரியம் வெளி யிட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் மின்தடைகளை சரி செய்யவரும் மின்வாரிய பணியாளர்கள் யாருக்கும் பணமோ, பொருளோ கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் கேபிள்கள் அல்லது வேறு ஏதேனும் தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் என்று பணம் கோரினால், பொதுமக்கள் உடனடியாக புகார்கொடுக்கலாம்.

விழிப்புப் பணி அலுவலர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர், விழிப்புப்பணி, தமிழ்நாடு மின்சார வாரியம், என்.பி.கே.ஆர்.ஆர். மாளிகை, எண். 144, அண்ணா சாலை, சென்னை – 2 (கைபேசி எண் - 9445857593, 9445857594) என்ற முகவரியில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments