பொங்கல் பரிசு- ரேசன் கடைகளில் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க உத்தரவு..!
தமிழக கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு 
   வழங்கும்போது முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை                         அளிக்க வேண்டும்.

* பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும்.

* மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும்.

* ஒரு நாளில் காலையில் நூறு பேருக்கும், பிற்பகலில் நூறு பேருக்கும் என 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பரிசுத்தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments