ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 
இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 10-01-2021 வரை நீட்டித்துள்ளது. இதனை தொடர்ந்து புனித பயணிகள் 10-01-2021 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 10.1.2022 வரையில் செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது ஹஜ் 2021-ல் கொச்சின் புறப்பாட்டு தளத்தில் இருந்து அஸிஸியா தங்குமிட வகைக்கு ரூ.3,56,433.40 செலவினமாகும் என மும்பை, ஹஜ் குழு தெரிவித்துள்ளது. குழு இணைய முகவரி (www.hajcommittee.gov.in.) தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments