அதிராம்பட்டினத்தில் பெண் பயனாளி இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கல்!
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற பெண் பயனாளி இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அவ்வமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

   நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  
   இதில், ஆதரவற்ற அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் பயனாளி இருவருக்கு, கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் அளித்த நிதியில், ரூ.14 ஆயிரம் மதிப்பிலான நாற்காலியுடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஏ.எஸ் அகமது ஜலீல், ஓ.சாகுல் ஹமீது, எச் முகமது இப்ராஹிம், முகமது முகைதீன், எம்.நிஜாமுதீன், முகமது புஹாரி, டி.ஏ அகமது அனஸ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments