‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து புதுக்கோட்டையில் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்.!!‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து புதுக்கோட்டையில் நேற்று காலை போலீசார் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செரீனாபேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கீழ ராஜவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் கோர்ட்டு வளாகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தபோது டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments