புரெவி புயல் எதிரொலி: கோபாலப்பட்டிணத்தில் விடாமல் பெய்த மழை.. பொதுமக்கள் வீட்டிலேயே முடக்கம்.. கொந்தளிப்பாக காணப்பட்ட கடல்.!!



மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புரெவி புயல் காரணமாக நேற்று இரவு முதல் கன மழை பெய்ய தொடங்கி நேற்று மாலை வரை தொடர்ந்தது. புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது நேற்று முன்தினம் இரவு முழுவதும் மற்றும் நேற்று இடைவிடாது தொடர்ந்து கன மழையாக பெய்ததது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடல் அலை கொந்தளிப்பாக காணப்பட்டது.

இந்த கன மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் குளிர் தாங்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.







மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments