புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற டிச.14-ந் தேதி தொடங்குகிறது... ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு.!!புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், இணைப்பதிவாளருமான எம்.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாய விலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வருகிற 14-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்கிறது. 

நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம், தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விவரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. 

நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்க பெறாத விண்ணப்பதாரர்கள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அன்னவாசல் சாலை, புதுக்கோட்டை என்ற முகவரியில் உள்ள தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வருகை புரிந்து விவரங்களை அறிந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments